ஒரு ஜென் சீடர் தனது குருவை அணுகினார். “குருவே, எனக்கு கோவம் மிக அதிகமாக வருகிறது. அதைக் கட்டுப்படுத்த எனக்கு உதவ முடியுமா? ” என்றார். சீடனை பார்த்த குரு “ஹ்ம்ம், அது சரி அந்த கோவத்தை எனக்குக் காட்ட முடியுமா? ” என்று கேட்டார். சீடன் "இப்போது முடியாது." என்றார். குரு அவனை பார்த்து "ஏன் முடியாது?" என்றார். குருவிடம் சீடன் கூறினான் "கோபம் திடீரென்று வருகிறது, எப்போது வரும் என்று கூட என்னால் கூற முடியாது என்று கூறினார் ." இதை கேட்ட குரு சீடனிடம் "இப்போது புரிகிறதா? நிச்சயமாக கோவம் உங்களின் இயல்பின் ஒரு பகுதியாக இருக்க முடியாது". “கோவம் உங்களின் இயல்பு எனில், அதைக் காண்பிப்பதில் உங்களுக்கு சிரமம் இருக்காது! உங்களுடையதல்லாத ஒன்றை பற்றி நீங்கள் ஏன் இவ்வளவு கவலை படுகிறீர்கள்? ” என்று உபதேசம் செய்தார். அந்த நிகழ்விற்கு பிறகு, அந்த சீடனின் கோவம் அதிகரிக்கும் போதெல்லாம் ஜென் குருவின் வார்த்தைகள் நினைவிற்கு வரும். விரைவில், அவர் தனது கோபத்தை குறைக்க கற்றுக்கொண்டார் மற்றும் ஒரு தெளிவா...